அருணாச்சல பிரதேசத்தில் அரசுக் காப்பீட்டுத் திட்டம்
October 31 , 2020 1762 days 646 0
மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது அரசுக் காப்பீட்டுத் திட்டத்தை முதன்முறையாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு நீட்டித்துள்ளது.இது நவம்பர் 1, 2020 முதல் அமலுக்கு வருகிறது.
இந்தத் திட்டத்தில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தும் அருணாச்சலப் பிரதேசத்தின் பாபம் பரே என்ற பகுதியில் அமைந்துள்ள அனைத்துத் தொழிற்சாலைகளும், அரசு காப்பீட்டுச் சட்டம் 1948 என்ற சட்டத்தின் கீழ் பயனை அடைவதற்குத் தகுதி பெறும்.
மாதத்திற்குரூ.21,000 ஊதியம் பெறும் நபர்கள் மற்றும் ரூ.25,000 வரை ஊதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவர்.