TNPSC Thervupettagam

அல்பைன் கஸ்தூரி மான் வளங்காப்பு அறிக்கையில் பிழை

August 10 , 2025 2 days 36 0
  • மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் (CZA) அறிக்கையானது, இந்திய உயிரியல் பூங்கா இனப்பெருக்கத் திட்டங்களில் அல்பைன் கஸ்தூரி மான் (மோஸ்கஸ் கிரிசோகாஸ்டர்) தவறாக அடையாளம் காணப் பட்டதை வெளிப்படுத்தியது.
  • உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள உயிரியல் பூங்காக்கள் இமயமலை கஸ்தூரி மானைத் (மோஸ்கஸ் லுகோகாஸ்டர்) தவறான முறையில் இனப்பெருக்கம் செய்தன.
  • அல்பைன் கஸ்தூரி மான் அதன் 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டில் IUCN அமைப்பினால் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • எந்த இந்திய உயிரியல் பூங்காவிலும் தற்போது காப்பு நிலையிலான அல்பைன் கஸ்தூரி மான்கள் காணப்படுவதில்லை.
  • 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து, காடுகளில் அல்பைன் கஸ்தூரி மான்களின் சமீபத்திய எண்ணிக்கை மதிப்பீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
  • 2006 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இனப் பெருக்கத் திட்டங்களுக்காக இந்திய உயிரியல் பூங்காக்களுக்கு மொத்தம் 28.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்