உடலில் குறுகிய பட்டைகளுடன் கூடிய மழைப் பாம்பு என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய வகை மழைப் பாம்பு இனமானது, மிசோரமின் வெப்பமண்டல காடுகளில் கண்டறியப் பட்டுள்ளது.
இந்த இனத்திற்கு ஸ்மிதோபிஸ் லெப்டோபாசியாட்டஸ் என்று அறிவியல் பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
இது ஸ்மிதோபிஸ் இனத்தில் ஸ்மிதோபிஸ் அட்டெம்போரலிஸ் மற்றும் ஸ்மிதோபிஸ் மிசோரமென்சிஸ் ஆகியவற்றிற்குப் பிறகு கண்டறியப்பட்ட மூன்றாவது இனமாகும்.
இந்தப் பாம்பு இனமானது, பகுதியளவு நீரில் வாழும் நீர்வாழ் உயிரினமாகவும், இரவில் நடமாடும் தன்மையுடனும், சுமார் 900 முதல் 1200 மீட்டர் உயரத்திற்கு இடைப்பட்ட நீரோடைகளுக்கு அருகிலுள்ள ஈரப்பதமான காடுகளில் வாழ்கிறது.
இந்த இனத்திற்கு முன்மொழியப்பட்ட மிசோ பெயர் ருவாருல் என்பதாகும்.