மேற்கு ஆசிய நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு ஆதரவளிக்க அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS) 5.0-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
இத்திட்டம் தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம் (NCGTC) மூலம் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் ஆதரவை வழங்கும்.
ECLGS 5.0 திட்டமானது ₹2.55 லட்சம் கோடி கூடுதல் கடன் ஓட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளது என்பதோடு இதில் விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட ₹5,000 கோடியும் அடங்கும்.
இத்திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (MSMEs) 100% உத்தரவாதப் பாதுகாப்பையும், MSME அல்லாத நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு 90% பாதுகாப்பையும் வழங்குகிறது.
இந்தத் திட்டம் 2027 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை அனுமதிக்கப்படும் கடன்களுக்குப் பொருந்தும்.