கேரள உயர் நீதிமன்றமானது, அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குள் அஷ்டமுடி ஈரநில மேலாண்மை அலகை உருவாக்குமாறு மாநில அரசுக்கும், கேரள மாநில ஈரநில ஆணையத்திற்கும் (SWAK) உத்தரவிட்டது.
அஷ்டமுடி ஈரநிலத்திற்கான தளம் சார்ந்த ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தினை ஆறு மாதங்களுக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அஷ்டமுடி ஏரியானது கேரளாவின் இரண்டாவது பெரிய ஈரநிலமாகும், மேலும் இது 2002 ஆம் ஆண்டில் சர்வதேச ராம்சர் உடன்படிக்கையின் கீழ் ராம்சர் தளமாக நியமிக்கப் பட்டது.
இந்த ஈரநிலத்தின் பரப்பளவு 61.40 சதுர கிலோமீட்டரிலிருந்து 34 சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளதோடு, அதிக மாசுபாடு மற்றும் வண்டல் படிவையும் எதிர்கொள்கிறது.
2023 ஆம் ஆண்டில், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (NGT) ஆனது அஷ்டமுடி ஏரி மற்றும் பிற ஈரநிலங்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக மாநில அரசுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
செயல்பாடுகளுக்கான நீடித்த நிலையான நடைமுறைகளை உருவாக்கவும், வலை தளம் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பொது கருத்துரைப்பு அமைப்பைப் பேணவும் நீதிமன்றம் அந்தப் பிரிவுக்கு உத்தரவிட்டது.