ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) - சென்னை குடிநீர் திட்டம்
August 24 , 2026 11 hrs 0 min 12 0
சென்னையின் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை நவீனப் படுத்துவதற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) 230 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சென்னை பருவநிலை-எதிர்ப்புத்திறன் கொண்ட நீர் பாதுகாப்பு மற்றும் கழிவுநீர் திட்டம், பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும்.
170 கி.மீ-க்கும் அதிகமான நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும்.
ஏழு நீர் இறைப்பு நிலையங்களும் 38 கழிவுநீர் இறைப்பு நிலையங்களும் மேம்படுத்தப் படும்.
செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் மூலம் நீர் பயன்பாட்டு மேலாண்மையை இத்திட்டம் வலுப்படுத்தும்.
பருவநிலை எதிர்ப்புத்திறன், பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், அதே நேரத்தில் சென்னையின் நீர் அமைப்பை மிகவும் திறமையானதாகவும் நிதி ரீதியாக நிலையானதாகவும் மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.