“பர்யதான் பார்வ் 2019” என்ற நாடு முழுவதுமான சுற்றுலாத் துறைக்கான திட்டத் துவக்கத்தின் இரண்டாவது நாளன்று, சுற்றுலாத் துறை அமைச்சகம் “ஆடியோ ஒடிகோஸ்” என்ற ஒலிக் கைபேசி வசதியை வெளியிட்டுள்ளது.
இந்த வசதியானது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தளங்கள் உள்ளிட்ட 12 தளங்களுக்கு கிடைக்கின்றது.
ஆடியோ ஒடிகோஸ் செயலி பயணத்தின் போது சுலபமான போக்குவரத்து வசதிக்காக அத்தளத்தின் ஒரு வரைபடத்தை அச்செயலியின் உள்ளே கொண்டிருக்கின்றது.
இதன் பயன்பாட்டாளர்கள் அத்தளத்தின் கதைச் சுருக்கம், விரிவான வரலாறு மற்றும் டிஜிட்டல் முறையிலான தகவல்கள் போன்ற அதன் வரலாற்றின் பல்வேறு பதிப்புகளையும் கிடைக்கப் பெறுவர்.
தங்களுக்கு விருப்பமான மொழி மற்றும் வரலாற்றின் பதிப்பில் ஒலிப் பதிப்பை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும்.