ஆட்டோபென் மூலம் கையொப்பமிடப்பட்ட அமெரிக்க ஆவணங்கள்
December 6 , 2025 6 days 87 0
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆட்டோபென் (தானியங்கி பேனா) எனும் சாதனத்தைப் பயன்படுத்தி முன்னாள் அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்ட அனைத்து ஆவணங்களையும் செல்லாததாக அறிவித்தார்.
ஆட்டோபென் என்பது அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்கு கையால் எழுதப்பட்ட கையொப்பத்தை நகலெடுக்கும் ஒரு இயந்திரம் ஆகும்.
வழக்கமான அறிக்கை வேலைகளுக்கு 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்க அதிபர்களால் ஆட்டோபென் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அறிவிப்பில் நிர்வாக உத்தரவுகள், ஒப்பந்தங்கள் மற்றும் பைடன் ஒரு ஆட்டோ பென் மூலம் கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வ குறிப்பாணைகள் ஆகியவை அடங்கும்.
பைடன் தனது இறுதி நேரத்தில் வழங்கிய முன்கூட்டிய மன்னிப்புகளும் இந்தப் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
நீதிமன்றங்கள் முன்பு ஆட்டோபென் மூலம் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் அதிபரின் அங்கீகாரமாக ஏற்றுக் கொண்டன.