குஜராத்தின் சூரத்திற்கு அருகே உள்ள ஹஜிராவில் லார்சன் மற்றும் ட்யூப்ரோவால் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் தயாரிப்பு வளாகத்தினை இந்திய பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த ஆயுதத் தயாரிப்பு வளாகமானது நாட்டின் முதலாவது தனியார் நிறுவனமாகும். இங்கு K9 ரக வஜ்ரா தானியங்கி பீரங்கி துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன.
ஹஜிராவில் அமைந்துள்ள இந்த ஆயுதத் தயாரிப்பு வளாகமானது பாதுகாப்புத் துறையில் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் ஒரு சிறந்த உதாரணமாகும்.