TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு (ABHA) விரிவாக்கம்

July 23 , 2026 2 days 82 0
  • தமிழ்நாடு 2.54 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகளை (ABHA) உருவாக்கி உள்ளதுடன், அவற்றை அரசு சுகாதார நிலையங்களில் உள்ள சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு 3.0 (HMIS 3.0) உடன் ஒருங்கிணைத்து வருகிறது.
  • ABHA என்பது 2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் (ABDM) கீழ் உள்ள 14 இலக்க தனித்துவமான சுகாதார அடையாளங் காட்டி ஆகும் என்பதோடு இது சுகாதாரப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் சேமிக்க மற்றும் அணுக உதவுகிறது.
  • இந்த ஒருங்கிணைப்பு, நோயாளிகளின் ஒப்புதலுடன், தனிப்பட்ட சுகாதாரப் பதிவு (PHR) செயலி மூலம் மருந்துச் சீட்டுகள், ஆய்வக அறிக்கைகள் மற்றும் கண்டறியும் படங்கள் போன்ற டிஜிட்டல் மருத்துவப் பதிவுகளை அணுக அனுமதிக்கிறது.
  • சுகாதாரப் பாதுகாப்பின் தொடர்ச்சியை மேம்படுத்தவும், காகிதப் பதிவுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ABDM ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு இடையே சுகாதாரத் தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ளவும் ABHA உதவுகிறது.
  • அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் மூலம் மாநிலத்தின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 50% பேருக்கு ABHA அடையாள எண்களை உருவாக்க தமிழ்நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்