TNPSC Thervupettagam

WTO மீன்வள ஒப்பந்தம் - இந்தியா

July 23 , 2026 2 days 48 0
  • உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) தனது ஏற்புக்கான ஆவணத்தைச் சமர்ப்பித்ததன் மூலம், மீன்பிடித் துறைக்கான மானியங்கள் குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் 123-வது உறுப்பினராக இந்தியா மாறியது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 12-வது WTO அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் (MC12) இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (IUU) மீன்பிடித்தலை ஆதரிக்கும் மானியங்களைத் தடை செய்வதையும், அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் அதிக மீன்பிடி திறனுக்குப் பங்களிக்கும் மானியங்களைக் கையாளுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது கடல்வாழ் உயிரினங்களை இயற்கையாகப் பிடிக்கும் மீன் பிடித்தலுக்குப் பொருந்தும்; மேலும் மீன் வளர்ப்பு மற்றும் உள்நாட்டு மீன்வளத்தை இதன் நோக்கத்திலிருந்து விலக்குகிறது.
  • WTO உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏற்றுக் கொண்ட பிறகு, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்