TNPSC Thervupettagam

PARIVARTAN திட்டம்

July 23 , 2026 2 days 81 0
  • தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) போக்குவரத்து தொடர்பான காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான PARIVARTAN திட்டத்திற்கான வழிகாட்டுதல்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) ஒப்புதல் அளித்துள்ளது.
  • PARIVARTAN என்பது போக்குவரத்து காற்று மாசுபாடு மற்றும் வலையமைப்பு உமிழ்வைக் குறைப்பதற்கான வாகன சொத்துக்களின் துரிதப்படுத்தப்பட்ட புதுப்பித்தல் மற்றும் ஊக்கமளிப்பதற்கான திட்டம் என்பதாகும்.
  • பழைய, அதிக மாசுகளை வெளியிடும் லாரிகள் மற்றும் பேருந்துகளுக்குப் பதிலாக பாரத் நிலை (BS)-VI இணக்கமான அல்லது மின்சார வாகனங்களை மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் (MoRTH) செயல்படுத்தப் பட்டு, தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியத்தால் (NCRPB) நிதியளிக்கப்படுகிறது.
  • இத்திட்டம் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியது மற்றும் VAHAN, V-Scrap, DigiELV மற்றும் பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்