TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் திட்டம் - மேற்கு வங்கம்

August 20 , 2026 5 days 69 0
  • ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தை செயல்படுத்தும் 36-வது மற்றும் இறுதி மாநிலமாக மேற்கு வங்கம் மாறியதன் மூலம், நாடு தழுவிய இதன் அமலாக்கம் முழுமையடைந்துள்ளது.
  • தகுதியான பயனாளிகளுக்கு இத்திட்டம் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரையிலான சுகாதாரக் காப்பீட்டை வழங்குகிறது.
  • இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய சுகாதார ஆணையம் (NHA) மற்றும் மேற்கு வங்க அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
  • இத்திட்டத்தின் கீழ் 36,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • நாடு முழுவதும் 44 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப் பட்டு உள்ளன.
  • இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, சுமார் ₹1.82 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 12 கோடிக்கும் மேற்பட்ட சிகிச்சைகளைப் பயனாளிகள் பெற்றுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்