TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாவ் பிரச்சாரம்

September 18 , 2023 701 days 350 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் ஆயுஷ்மான் பாவ் பிரச்சாரத்தைக் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
  • இது ஒரு விரிவான தேசிய அளவிலான சுகாதாரப் பாதுகாப்பு முன்னெடுப்பாகும்.
  • நாட்டின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தைச் சென்றடையும் வகையில், சுகாதாரத் திட்டங்களின் முழு அளவில் நிறைவான (மேம்பாட்டு) பரவலை இது உறுதி செய்கிறது.
  • இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
  • இது ஆயுஷ்மான் அட்டைகளை வழங்குதல், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு (ABHA) அடையாள எண்களை உருவாக்குதல் மற்றும் முக்கிய சுகாதாரத் திட்டங்கள் மற்றும் காசநோய் மற்றும் அரிவாள் வடிவ உயிரணு நோய் போன்ற பல்வேறு தொற்றாத நோய் நிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 02 ஆம் தேதி வரை நடைபெறும் 'சேவா பக்வாடா' இயக்கத்தின் போது செயல்படுத்தப்பட உள்ளது.
  • இது எந்தவொரு ஏற்றத்தாழ்வு அல்லது விலக்குமின்றி ஒவ்வொரு தனிநபரும் மிக அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய இயக்கமாகும்.
  • இந்த ஒத்திசைவு அணுகுமுறையானது அதன் மூன்று கூறுகளின் மூலம் சுகாதாரச் சேவைகளை முழு நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது:
    • ஆயுஷ்மான் – ஆப்கே துவார் 3.0
    • சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (HWC) மற்றும் சமூக சுகாதார மையங்கள் (CHC) ஆகியவற்றில் ஆயுஷ்மான் மேளாக்களை ஏற்பாடு செய்தல்,
    • ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்திலும் ஆயுஷ்மான் சபைகளை ஏற்பாடு செய்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்