ஆர்க்கியாவின் புதிய இனங்கள்
- நுண்ணுயிரியலாளர்கள் மனிதக் குடலில் முன்னர் அறியப்படாத மீத்தேன் உற்பத்தி செய்யும் தொல்லுயிரிகள்/ஆர்க்கியா இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
- அவர்கள் அதற்கு மெத்தனோபிரேவிபாக்டர் இன்டெஸ்டினி sp. nov. WWM1085 மாற்றுரு என்று பெயரிட்டனர்.
- இது ஆக்ஸிஜன் இல்லாதச் சூழல்களில் மட்டுமே உயிர் வாழ்கிறது மற்றும் மீத்தேன் வாயுவினை உற்பத்தி செய்கிறது.
- அந்தக் குழுவானது GRAZ-2 என நன்கு அழைக்கப்படுகின்ற மெத்தனோபிரேவிபாக்டர் ஸ்மிதியின் புதிய மாறுபாட்டையும் அடையாளம் கண்டுள்ளது.
- ஆர்க்கியா என்பது பாக்டீரியா மற்றும் யூகாரியோட்டுகளை மிக நன்கு உள்ளடக்கிய உயிரினங்களின் மூன்று அங்கீகரிக்கப்பட்ட குழுக்களில் ஒன்றாகும்.
- மீத்தனோஜன்கள் எனப்படும் ஆர்க்கியாவின் ஒரு குழுவானது, ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை உடைப்பதன் மூலம் மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்கிறது.
- இந்த நுண்ணுயிரிகள் மனிதர்கள் உட்பட விலங்குகளில் நிகழும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு இன்றியமையாதவையாகும்.

Post Views:
49