TNPSC Thervupettagam

ஆலிவ் ரெட்லி ஆமைகள் உயிரிழப்பு

January 23 , 2025 172 days 193 0
  • ஏராளமான உயிரிழந்த ஆலிவ் ரெட்லி ஆமைகள்/சிற்றாமைகள் தமிழ்நாட்டில், மிக குறிப்பாக சென்னையில் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ளன.
  • ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப் பெருக்கத்திற்காக வேண்டி செப்டம்பர்-அக்டோபர் ஆகிய மாதங்களில் தமிழகக் கடற்கரைக்கு அருகில் வருகின்றன.
  • அவை முட்டையிடுவதற்காக என்று வலையமைக்கும் காலம் நவம்பர் மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடிவடைகிறது.
  • 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் ஆனது, வலை அமைக்கும் பருவத்தில் நன்கு அடையாளம் காணப்பட்ட வலையமைக்கும் மற்றும் அது இனப்பெருக்கம் செய்யும் இடங்களிலிருந்து ஐந்து கடல் மைல்களுக்குள் இயந்திர மயமாக்கப் பட்ட படகுகள் மூலமான மீன்பிடி நடவடிக்கைகளைத் தடை செய்கிறது.
  • இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் மேற்குக் கடற்கரையில் உள்ள பல கடலோர மாநிலங்களில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிடுகின்றன.
  • இருப்பினும், ஒடிசாவில் பெருமளவில் அவை வலையமைக்கின்றன என்ற நிலையில் அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் வலைகளை அமைக்கின்றன.
  • ஒடிசாவின் கஹிர்மாதா மற்றும் ருஷிகுல்யா கடற்கரைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான பெண் ஆலிவ் ரெட்லி ஆமைகளின் வருகை தருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்