இந்திய இரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆஸ்க் திஷா (ASK DISHA) என்ற பேசும் கருவியை, தனது வாடிக்கையாளர்களுடன் இந்தி மொழியில் உரையாடும் வண்ணம் இயக்கியுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி ஆனது ஆஸ்க் திஷா (எப்போது வேண்டுமானாலும் உதவி பெறுவதற்கான டிஜிட்டல் இடைமுகம்) பேசும் கருவியை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இரயில்வே பயணிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதின் மூலம் அணுகலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பேசும் கருவி குரலால் இயக்கக்கூடியது. எதிர்காலத்தில் பிற பிராந்திய மொழிகளிலும் இயங்க வல்லது.