ஆஸ்திரேலிய நீதிமன்றம் இரட்டை குடியுரிமைக்காக துணைப் பிரதமரை தகுதி நீக்கியது
October 29 , 2017 2927 days 1059 0
ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் துணைப் பிரதமர் பார்னபி ஐய்ஸையும் அவருடன் சேர்த்து நான்கு ஆட்சிப்பேரவை உறுப்பினர்களையும் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதற்காக பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் அரசியலமைப்பானது நாடாளுமன்றத்தில் இரட்டை குடியுரிமை கொண்டவர்களைத் தடை செய்கிறது. இந்தத் தடையானது காலங்கடந்த ஒன்று எனவும் நாட்டின் பாதி மக்கள் குடியேறியவர்களாகவும் அல்லது வெளிநாட்டில் பிறந்த பெற்றோர்களையும் கொண்டுள்ளதாகவும் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.