April 28 , 2021
1510 days
678
- ஆப்பிரிக்காவில் நீண்ட காலம் பணியாற்றிய தலைவர்களுள் ஒருவரான சாட் நாட்டின் அதிபரான இட்ரிஸ் டெபி 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று உயிரிழந்தார்.
- அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் அவர் காயமடைந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.
- அவரின் வயது 68 ஆகும்.
- ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டெபி வெற்றி பெற்றார்.
- இது அவரது ஆறாவது பதவிக் காலமாக இருந்திருக்கும்.
- இட்ரிஸ் டெபி சாட் நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்தார்.
Post Views:
678