TNPSC Thervupettagam

இட ஒதுக்கீடு குறித்த மும்மைச் சோதனை கணக்கெடுப்பு

January 2 , 2023 946 days 474 0
  • இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
  • இட ஒதுக்கீட்டிற்கான "மும்மைச் சோதனை" என்ற ஒரு அவசிய நிபந்தனை பூர்த்தி செய்யப் படாததால் இந்த அறிவிப்பானது விடுக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற விகாஸ் கிஷன்ராவ் கவாலி மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் பிற மாநிலங்கள் இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் மும்மைச் சோதனை என்ற ஒரு கருத்தினை முன்வைத்தது.
  • இந்தக் கருத்தானது, உள்ளாட்சி அமைப்புகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டினை இறுதி செய்வதற்கு அரசாங்கம் மூன்று பணிகளைச் செயல்படுத்துதலை உள்ளடக்கியது ஆகும்.
  • அந்தப் பணிகள்
    • உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையின் பின்தங்கிய இயல்பு மற்றும் தாக்கங்கள் குறித்து ஒரு ஆழமான தகவல் சார்ந்த ஆய்வினை மேற் கொள்வதற்காக ஒரு பிரத்தியேக ஆணையத்தை அமைத்தல்.
    • ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் தேவைப் படும் இட ஒதுக்கீட்டின் விகிதத்தைக் குறிப்பிடுதல்
    • பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடுகள் மொத்த இடங்களின் 50 சதவீத வரம்பினைத் தாண்டாமல் இருப்பதை உறுதி செய்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்