TNPSC Thervupettagam

தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (RVM)

January 2 , 2023 945 days 886 0
  • இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது இந்தியா முழுவதும் உள்ள உள்நாட்டுப் புலம் பெயர்ந்தோருக்கு வாக்களிப்பதற்கான ஒரு வசதியினை வழங்கும் விதமாக தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (RVM) ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.
  • தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆனது இணையத்துடன் இணைக்கப் படாமல், தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு தனிப்பட்ட அமைப்பாகச் செயல்படும்.
  • வாக்காளர்களின் தேர்தல் பங்கேற்பினை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டுப் புலம் பெயர்ந்தோர் தேர்தலில் பங்கேற்பதை எளிதாக்குவது ஆகியவை தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப் படுவதன் ஒரு குறிக்கோள் ஆகும்.
  • தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது ஒரு தொலைதூர வாக்குச் சாவடியில் இருந்தே 72 தொகுதிகள் வரையில் கையாளக் கூடிய பல்தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமாகும்.
  • இது நிகழ்நேர அடிப்படையில் சோதனை செய்யப்பட்ட M3 (மார்க் 3) வகை தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டதோடு மட்டும் அல்லாமல், இது உள்நாட்டுப் புலம்பெயர்ந்தோர், தொலைதூர வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வழிவகை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும்.
  • தொலைதூர வாக்களிப்பு முறையினை அறிமுகப்படுத்துவதற்காக 1950 மற்றும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் நடத்தை விதிகள், 1961 மற்றும் வாக்காளர்கள் பதிவு விதிகள், 1960 ஆகியவை திருத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்