தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் மிகக் குறைந்த அளவிலான செயல்திறனையே கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 29 தகவல் ஆணையங்களில் கோரப்பட்டத் தகவல்களில் இது வெறும் 14% வரை மட்டுமே ஆகும்.
கோரப்பட்டத் தகவல்களில் 23% மட்டுமே வழங்கியதுடன் மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அவை பெற்ற முறையீடுகள் அல்லது புகார்களில் சுமார் 40% வரையிலானவற்றிற்கு மட்டுமே பதில் அளித்துள்ளன.