இந்திய அரசு 2026-ஆம் ஆண்டிற்கான இணையவழி விளையாட்டுகளுக்கான மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகளை அறிவித்துள்ளது, இது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த விதிகள் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதையும், பயனர்களைப் பாதுகாப்பதையும் மற்றும் நிதி அமைப்பைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
விளையாட்டுகளை இணையவழிப் பண விளையாட்டுகள், சமூக விளையாட்டுகள் அல்லது இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) என வகைப்படுத்த தெளிவான வழிமுறையை இவை வழங்குகின்றன.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட ஒழுங்குமுறை அமைப்பாக இந்திய இணையவழி விளையாட்டுகளுக்கான ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் பாதுகாப்பு அம்சங்கள், குறை தீர்க்கும் வழிமுறைகள், வெளிப்படைத் தன்மை மற்றும் மேல்முறையீட்டு வழிமுறையுடன் கூடிய அபராதங்கள் ஆகியவற்றை இந்த விதிகள் கட்டாயமாக்குகின்றன.