TNPSC Thervupettagam

வேளாண் நுண்ணறிவு அமைப்பு

April 26 , 2026 7 days 83 0
  • ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Ropar) இந்தியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண் நுண்ணறிவு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த அமைப்பில் Swan (மேம்பட்ட வானிலை நிலையங்கள்), கிரிஷி நுண்ணறிவு அழைப்பு மையங்கள் மற்றும் அன்னம் அரட்டை இயந்திரம் (ACE) ஆகியவை அடங்கும்.
  • இது ANNAM.AI திட்டத்தின் கீழ் விவசாயத்திற்கான செயற்கை நுண்ணறிவு (AI) சிறப்பு மையத்தால் (CoE) உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த சுற்றுச்சூழல் அமைப்பு செயற்கை நுண்ணறிவு (AI), இணைய உலக இணைப்பு (IoT), பருவநிலை அறிவியல் மற்றும் பன்மொழி ஆலோசனை அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது.
  • முடிவெடுத்தல் மற்றும் பண்ணை உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட முழுமையான விவசாய மதிப்புச் சங்கிலியை ஆதரிக்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்