TNPSC Thervupettagam

இணையவழி விளையாட்டுகளுக்கான விதிகள் 2026

April 26 , 2026 7 days 73 0
  • இந்திய அரசு 2026-ஆம் ஆண்டிற்கான இணையவழி விளையாட்டுகளுக்கான மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகளை அறிவித்துள்ளது, இது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
  • இந்த விதிகள் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதையும், பயனர்களைப் பாதுகாப்பதையும் மற்றும் நிதி அமைப்பைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • விளையாட்டுகளை இணையவழிப் பண விளையாட்டுகள், சமூக விளையாட்டுகள் அல்லது இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) என வகைப்படுத்த தெளிவான வழிமுறையை இவை வழங்குகின்றன.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட ஒழுங்குமுறை அமைப்பாக இந்திய இணையவழி விளையாட்டுகளுக்கான ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பயனர்களின் பாதுகாப்பு அம்சங்கள், குறை தீர்க்கும் வழிமுறைகள், வெளிப்படைத் தன்மை மற்றும் மேல்முறையீட்டு வழிமுறையுடன் கூடிய அபராதங்கள் ஆகியவற்றை இந்த விதிகள் கட்டாயமாக்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்