TNPSC Thervupettagam

இந்தியப் புலனாய்வு அமைப்பிற்கு வேண்டிய ஒப்புதல்

November 22 , 2020 1702 days 598 0
  • இந்திய உச்சநீதிமன்றமானது மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் CBI அமைப்பின்  விசாரணைக்கு அந்தந்த மாநிலங்களிடம் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
  • அந்த மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் இந்த முகமையின் வரம்பை நீட்டிப்பதற்கு மத்திய அரசிற்கு அனுமதி வழங்கப் படவில்லை.
  • இது கூட்டாட்சிக் கொள்கையுடன் ஒன்றிப் பொருந்துவதாக விளங்குகின்றது.
  • தங்களது அதிகார வரம்பிற்குள் புதிய வழக்குகளின் மீது விசாரணையை மேற்கொள்ள CBI அமைப்பிற்கு வழங்கப் பட்டிருந்த தமது பொது ஒப்புதலை பிஜேபி அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களான கேரளா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மிசோரம், சத்தீஸ்கர், இராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்கள் திரும்பப் பெற்ற சமயத்தில் இந்தத் தீர்ப்பானது இந்திய உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப் பட்டுள்ளது.
  • தில்லி சிறப்புக் காவல்துறை உருவாக்கச் சட்டம், 1946 என்ற சட்டமானது CBI-யின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்