TNPSC Thervupettagam

இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதா, 2026

August 9 , 2026 5 days 49 0
  • 1959 ஆம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டத்தை மாற்றுவதற்கும் அதன் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றுவதற்குமாக இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ISI) மசோதா, 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தியப் புள்ளியியல் நிறுவனம் பி.சி. மகலனோபிஸ் என்பவரால் 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, மேலும் 1959 ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.
  • இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை ஒரு சங்கத்திலிருந்து சட்டப்பூர்வமான நிறுவன அமைப்பாக மாற்றவும், அதன் முக்கிய கொள்கைகளை வகுக்கும் அமைப்பாக 11 உறுப்பினர்களைக் கொண்ட ஆளுநர் குழுவை உருவாக்கவும் இந்த மசோதா முன் மொழிகிறது.
  • இந்தியாவின் குடியரசுத் தலைவர் அதன் பார்வையாளராக (Visitor) இருப்பார், அதே சமயம் படிப்புகள் மற்றும் தேர்வுகள் போன்ற கல்வி சார்ந்த விஷயங்களை ஒரு கல்விக் குழு நிர்வகிக்கும்.
  • இயக்குநரின் நியமனம் மற்றும் மறுஆய்வு ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்யவும், தற்போதுள்ள நிறுவனத்தின் சொத்துகள், பொறுப்புகள், பணியாளர்கள் மற்றும் கல்வித் திட்டங்களை புதிய சட்டப்பூர்வ அமைப்புக்கு மாற்றவும் இந்த மசோதா முன்மொழிகிறது.
  • இந்தியப் புள்ளியியல் நிறுவனம் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது, மேலும் இது தில்லி, பெங்களூரு, சென்னை மற்றும் தேஜ்பூர் ஆகிய இடங்களில் மையங்களைக் கொண்டு ள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்