இந்தியப் பெருங்கடல் உரையாடல் என்ற முன்னெடுப்பு – தில்லி
December 15 , 2019 1984 days 563 0
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமானது இந்தியப் பெருங்கடல் உரையாடலின் (Indian Ocean Dialogue - IOD) 6வது கூட்டம் மற்றும் தில்லி உரையாடல் என்ற முன்னெடுப்பின் 11வது கூட்டம் ஆகியவற்றை புது தில்லியில் உள்ள பிரவாசி பாரதிய மையத்தில் நடத்தியது.
இந்த இரண்டு உரையாடல்களும் தொடர்ச்சியாகவும் ஒரே மாதிரியான இந்திய - பசிபிக் கருப்பொருள்களிலும் நடத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
2019 ஆம் ஆண்டின் இந்தியப் பெருங்கடல் உரையாடல் கூட்டத்தின் கருப்பொருள் ‘இந்திய - பசிபிக்: விரிவாக்கப்பட்ட ஒரு புவியியல் பரப்பு மூலம் இந்தியப் பெருங்கடல் பகுதியை மீண்டும் கற்பனை செய்தல்” என்பதாகும்.
IOD ஆனது உலக விவகாரங்களுக்கான இந்தியப் பெருமன்றத்தால் (Indian Council for World Affairs - ICWA) ஏற்பாடு செய்யப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் தில்லி உரையாடலுக்கான கருத்துரு, ‘இந்திய - பசிபிக் கூட்டுறவை மேம்படுத்துதல்’ என்பதாகும்.
இது புது தில்லியைத் தலைமையாகக் கொண்ட தன்னாட்சிக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பினால் (Research and Information System - RIS) ஏற்பாடு செய்யப்பட்டது.