TNPSC Thervupettagam

உள்கட்டமைப்பு முதலீட்டு அமைப்பு

December 15 , 2019 1984 days 586 0
  • மத்திய அமைச்சரவையானது உள்கட்டமைப்பு முதலீட்டு அமைப்பை (Infrastructure Investment Trust - InvIT) அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதியளிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (National Highways Authority of India - NHAI) ஒப்புதல் அளித்துள்ளது.
  • பாரத்மாலா என்ற திட்டத்தைக் கருத்தில் கொள்கையில், குறிப்பிட்ட கால அளவிற்குள் இந்தத் திட்டங்களை முடிப்பதற்கு NHAIக்கு கொஞ்சம் அதிகமான   நிதி தேவைப்படும்.
  • பாரத்மாலா திட்டம் என்பது அரசின் ஒரு முதன்மையான நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டமாகும்.

உள்கட்டமைப்பு முதலீட்டு அமைப்பு பற்றி:

  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் வழங்கப்பட்ட InvIT வழி காட்டுதல்களின் படி, NHAI ஆனது உள்கட்டமைப்பு முதலீட்டு அமைப்புகளை அமைக்க இருக்கின்றது.
  • InvITன் கீழ், ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட அமைப்பை (special purpose vehicle - SPV) உருவாக்குவதற்காக இந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொகுக்கப்பட இருக்கின்றன. அதன்பின் இந்தத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்