உட்கோட்டு நுழைவு அனுமதி முறை – நாகாலாந்தின் திமாபூர் மாவட்டம் மற்றும் மணிப்பூருக்கு நீட்டிப்பு
December 15 , 2019 1985 days 560 0
நாகாலாந்து அரசானது திமாபூர் மாவட்டத்திற்கு உட்கோட்டு நுழைவு அனுமதி (Inner Line Permit - ILP) முறையை நீட்டித்துள்ளது.
குடியுரிமைத் திருத்த மசோதாவின் (Citizenship Amendment Bill - CAB) வரம்பிலிருந்து இந்த முழு மாவட்டத்திற்கும் விலக்கு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதுவரை, நாகாலாந்தில் ILPமுறையின் கீழ் இல்லாத ஒரே மாவட்டம் திமாபூர் ஆகும்.
ஏனெனில் இந்த மாவட்டமானது வணிக மையமாகவும் பரந்து பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகவும் உள்ளது (பெரும்பாலும் ‘சிறிய இந்தியா’ என்று குறிப்பிடப் படுகின்றது).
இந்த உட்கோட்டு நுழைவு அனுமதி முறையில் மணிப்பூரின் சேர்க்கையும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதியன்று அறிவிக்கப் பட்டது.
தற்சமயம் உட்கோட்டு நுழைவு அனுமதி முறை அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி இருக்கின்றது.
மேலும், அசாம் மற்றும் திரிபுராவில் உள்ள பழங்குடியினர் அல்லாத பகுதிகள் மற்றும் சிக்கிம் ஆகியவற்றைத் தவிர இந்தியாவில் வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் CABயிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.