TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தை 2026

May 21 , 2026 12 days 110 0
  • இந்தியா, Indian Ocean Region in a Transforming World என்ற கருத்துருவின் கீழ் 10-வது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தையை (IOD) புது தில்லியில் நடத்தியது.
  • இந்த ஆண்டு, 2025-27 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பெருங்கடலோர நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்கிறது.
  • இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தை (IOD) என்பது அரசு அதிகாரிகள், அறிஞர்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் சிவில் சமூக நிபுணர்களை ஒன்றிணைக்கும் ஒரு தடம் 1.5 (Track 1.5) மன்றமாகும்.
  • இந்தப் பேச்சுவார்த்தை முதன்முதலில் 2013-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற 13-வது IORA அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முன்மொழியப் பட்டதுடன் இதன் முதல் கூட்டத்தொடர் 2014-ஆம் ஆண்டில் கேரளாவில் நடைபெற்றது.
  • இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் பொருளாதாரம், பேரிடர் இடர் மேலாண்மை மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இப்பேச்சுவார்த்தை இந்தியாவின் மகாசாகர் (MAHASAGAR - பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான மேம்பாடு) தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்