இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினங்கள் பற்றிய ஆய்வு
July 26 , 2022 1057 days 466 0
நிதி ஆயோக் அமைப்பானது இந்தியப் புத்தாக்கக் குறியீட்டினைச் சமீபத்தில் வெளியிட்டது.
இது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அவற்றின் புத்தாக்கச் செயல்பாடுகளின் அடிப்படையில் தரவரிசைகளை வழங்குகிறது.
நிதி ஆயோக் அமைப்பின் 2021 ஆம் ஆண்டு இந்தியப் புத்தாக்கக் குறியீட்டின் படி, இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மொத்தச் செலவினம் உலகிலேயே மிகக் குறைவானதாக உள்ளது.
இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மக்கள் தொகையில் ஒருவருக்கு தலா 43 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் செலவிடுகிறது.
ரஷ்யா தலா 285 அமெரிக்க டாலர்கள், பிரேசில் 173 அமெரிக்க டாலர்கள், மலேசியா 293 டாலர்கள் என்ற அளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடுகின்றன.
பிரேசில் (1.16%) மற்றும் தென்னாப்பிரிக்கா (0.83%) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போதும் இந்தியாவின் செலவினம் குறைவாக உள்ளது.
மெக்ஸிகோ (0.31%) நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மொத்தச் செலவினம் (மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில்) மட்டுமே இந்தியாவை விட குறைவானப் பங்கைக் கொண்டுள்ளது.