TNPSC Thervupettagam

இந்தியாவின் உள்நாட்டு சிறிய வகை அணு உலைகள்

July 27 , 2026 15 hrs 0 min 43 0
  • 2033 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட குறைந்தது ஐந்து சிறிய வகை அணு உலைகளை (SMRs) உருவாக்கி செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • பாபா அணு ஆராய்ச்சி மையமானது (BARC) 220 மெகாவாட் மின் (MWe) பாரத் SMR, 55 MWe SMR மற்றும் 5 மெகாவாட் வெப்பம் (MWth) வரையிலான உயர்-வெப்பநிலை வாயு-குளிரூட்டப்பட்ட உலை (HTGR) ஆகிய மூன்று உலை வகைகளை வடிவமைத்து வருகிறது.
  • பாரத் SMR மற்றும் SMR-55 ஆகியவை அழுத்தப்பட்ட நீர் உலை (PWR) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, இது உயர் அழுத்த நீரை குளிரூட்டியாகவும் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்துகிறது.
  • அணுக்கரு வெப்பத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய விசாகப் பட்டினத்தில் HTGR உருவாக்கப்படும்.
  • இந்தியா 2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் (GW) அணுமின் திறனை அடைய இலக்கு வைத்துள்ளதுடன் இதில் 2031–32 ஆம் ஆண்டிற்குள் சுமார் 22 GW இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்