TNPSC Thervupettagam

இந்தியாவின் காற்றாலை ஆற்றல் இலக்கு 2035

June 23 , 2026 13 days 87 0
  • இந்தியா 2035 ஆம் ஆண்டிற்குள் 155 ஜிகாவாட் (GW) நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறனை இலக்காக நிர்ணயித்துள்ளதுடன் இதில் 2030 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் என்ற இடைக்கால இலக்கும் அடங்கும்.
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் 15 நிலவரப்படி இந்தியாவின் நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறன் 56.1 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளதுடன் இதன் மூலம் நிறுவப்பட்ட திறனின் அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய காற்றாலை ஆற்றல் சந்தையாக இந்தியா திகழ்கிறது.
  • 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியா 6.1 ஜிகாவாட் புதிய காற்றாலைத் திறனைச் சேர்த்துள்ளது என்பதோடு இது ஆண்டுக்கு ஆண்டு 46% அதிகரிப்பைப் பதிவு செய்து உள்ளது.
  • காற்றாலை ஆற்றல் விநியோகச் சங்கிலியை நிர்வகிப்பதற்கான இந்தியாவின் முதல் டிஜிட்டல் வலைதளமாக WT-MARUT (காற்றாலை – பொருட்கள், வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்) 2026 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று தொடங்கப்பட்டது.
  • உலகளாவிய காற்று தின மாநாடானது கோவாவில் நடைபெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்