TNPSC Thervupettagam

இந்தியாவின் குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம்

October 2 , 2025 2 days 34 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் ஆனது, யுனெஸ்கோவின் உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பில் சேர்க்கப்பட்டது.
  • லஹௌல்-ஸ்பித்தி மாவட்டத்தில் அமைந்துள்ள இது, ஆல்பைன் பாலைவனங்கள், பனிப் பாறை நிறைந்த பள்ளத்தாக்குகள் மற்றும் உயரமான பீடபூமிகளில் சுமார் 7,770 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ளது.
  • இது யுனெஸ்கோ அமைப்பினால் பட்டியலிடப்பட்ட இந்தியாவின் 13வது உயிர்க்கோள காப்பகமாகும் என்பதோடு இந்த வலையமைப்பில் மிகவும் குளிரான, வறண்ட சுற்றுச் சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.
  • இந்தக் காப்பகத்தில் இமயமலை பிர்ச் போன்ற அரிய தாவரங்கள் மற்றும் பனிச் சிறுத்தை, இமயமலை ஓநாய் மற்றும் தங்க நிறக் கழுகு போன்ற விலங்கினங்கள் உள்ளன.
  • யுனெஸ்கோவின் உலகளாவிய வலையமைப்பில் தற்போது 142 நாடுகளில் அமைந்த பூமியின் நிலப்பரப்பில் 5 சதவீதத்தினைக் கொண்ட 785 உயிர்க்கோளத் தளங்கள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்