TNPSC Thervupettagam

இந்தியாவின் சமூக விதை வங்கிகள்

November 24 , 2026 4 days 74 0
  • புது தில்லியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில், 652 சமூக விதை வங்கிகளை (CSBs) வரைபடமாக்கும் டிஜிட்டல் அட்லஸ்/நிலப்படத் தொகுப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக் கையேட்டை டைவர்சிஃபார்ம்-இந்தியா (DIVERSIFARM-India) வெளியிட்டது.
  • சமூக விதை வங்கிகள் (CSBs) என்பவை விவசாயிகளிடையே பாரம்பரிய மற்றும் உள்ளூர் சூழலுக்கு ஏற்ற விதைகளைச் சேகரித்து, பாதுகாத்து, சேமித்து, பெருக்கி, விநியோகிக்கும் சமூகத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களாகும்; இவை வேளாண் பல்லுயிர்தன்மைப் பெருக்கத்தைப் பாதுகாத்து விதை இருப்பை உறுதி செய்கின்றன.
  • இந்தியாவில் குறைந்தது 1,000 சமூக விதை வங்கிகள் இருப்பதாக இந்த ஆய்வு மதிப்பிடுகிறது; இவை பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கவும் விவசாயிகளின் மீள்தன்மையை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
  • டைவர்சிஃபார்ம்-இந்தியா என்பது நார்வேயின் ஃபிரிட்ஜோஃப் நான்சன் நிறுவனம் (FNI) மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) ஆகியவற்றால் வழி நடத்தப் படும் மூன்றாண்டுத் திட்டமாகும்.
  • இந்த ஆய்வு மேலாண்மைக் கட்டமைப்புகளின் அடிப்படையில் ஆறு வகையான சமூக விதை வங்கிகளை அடையாளம் கண்டுள்ளதுடன், ஒடிசாவில் அவற்றை மிகவும் நன்கு வலுப்படுத்துவதற்கான 10 அம்ச செயல்திட்டத்தையும் தயாரித்துள்ளது.
  • சமூக விதை வங்கிகளை ஆதரிப்பதற்கான முக்கிய சட்டக் கட்டமைப்புகளாகப் பயிர் ரகங்கள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2001 மற்றும் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம், 2002 ஆகியவற்றை இத்திட்டம் ஆய்வு செய்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்