TNPSC Thervupettagam

இந்தியாவின் பணப்பரிமாற்ற அதிகரிப்பு

June 20 , 2026 2 days 43 0
  • 2025-26 ஆம் நிதியாண்டில் தொழிலாளர்கள் அனுப்பிய பணமாக 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகையை இந்தியா பெற்றுள்ளது; இது குறைந்த அந்நிய முதலீடுகள் மற்றும் மூலதன வெளியேற்றங்களுக்கு மத்தியில் அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலையைச் (BoP) பாதுகாக்க உதவியது.
  • தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் 110.47 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இது 2024-25 நிதியாண்டை விட 26% அதிகமாகும்; அதேவேளையில் தனிப்பட்ட பரிமாற்றங்கள் 151.71 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து உள்ளது.
  • இந்தப் பணப்பரிமாற்றங்கள் பலவீனமான அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் அந்நிய தொகுப்பு முதலீடு (FPI) வரவுகளை ஈடு செய்ய உதவியதோடு, அந்நியச் செலாவணி இருப்புகளையும் ஆதரித்தன.
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது இந்த அந்நியச் செலாவணி வரவுகளை இருப்புகளை உருவாக்குவதற்கும், இந்திய ரூபாயின் (INR) மதிப்பு அதிக அளவில் உயர்வதைத் தடுப்பதற்கும் பயன்படுத்துகிறது.
  • இந்தியாவின் பணப்பரிமாற்றங்களில் வளைகுடாப் பகுதியின் பங்கு 2016-17 ஆம் ஆண்டில் 47% ஆக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 38% ஆகக் குறைந்துள்ளது; அதேசமயம் அமெரிக்கா (US) மற்றும் ஐக்கிய பேரரசின் (UK) பங்களிப்பு அதிகரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்