TNPSC Thervupettagam

இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தி 2026

June 23 , 2026 13 days 83 0
  • 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி இதுவரை இல்லாத அளவாக ₹1.78 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
  • இந்த மதிப்பானது 2024-25 ஆம் நிதியாண்டில் இருந்த ₹1.54 லட்சம் கோடியிலிருந்து 15.6% அதிகரிப்பையும், 2020-21 ஆம் நிதியாண்டில் இருந்த ₹84,643 கோடியிலிருந்து 110% எழுச்சியையும், 2013-14 ஆம் நிதியாண்டில் இருந்த ₹43,746 கோடியிலிருந்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிப்பையும் குறிக்கிறது.
  • மொத்த உற்பத்தியில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் (DPSUs) மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) சுமார் 76% பங்களித்துள்ள அதேவேளையில் தனியார் துறை அதன் உச்சபட்சப் பங்களிப்பாக 24 சதவீதத்தை அளித்துள்ளது.
  • 2025-26 ஆம் நிதியாண்டில் தனியார் துறையின் பங்களிப்பு சுமார் ₹42,000 கோடியை எட்டியுள்ளது என்பதோடு இது பாதுகாப்பு உற்பத்தியில் அதிகரித்த பங்கேற்பைப் பிரதிபலிக்கிறது.
  • உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியின் வளர்ச்சியால், 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியா சாதனை அளவாக ₹38,424 கோடிக்கு பாதுகாப்பு ஏற்றுமதி மதிப்பையும் எட்டியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்