இந்தியா 2035 ஆம் ஆண்டிற்குள் 155 ஜிகாவாட் (GW) நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறனை இலக்காக நிர்ணயித்துள்ளதுடன் இதில் 2030 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் என்ற இடைக்கால இலக்கும் அடங்கும்.
2026 ஆம் ஆண்டு ஜூன் 15 நிலவரப்படி இந்தியாவின் நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறன் 56.1 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளதுடன் இதன் மூலம் நிறுவப்பட்ட திறனின் அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய காற்றாலை ஆற்றல் சந்தையாக இந்தியா திகழ்கிறது.
2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியா 6.1 ஜிகாவாட் புதிய காற்றாலைத் திறனைச் சேர்த்துள்ளது என்பதோடு இது ஆண்டுக்கு ஆண்டு 46% அதிகரிப்பைப் பதிவு செய்து உள்ளது.
காற்றாலை ஆற்றல் விநியோகச் சங்கிலியை நிர்வகிப்பதற்கான இந்தியாவின் முதல் டிஜிட்டல் வலைதளமாக WT-MARUT (காற்றாலை – பொருட்கள், வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்) 2026 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று தொடங்கப்பட்டது.
உலகளாவிய காற்று தின மாநாடானது கோவாவில் நடைபெற்றது.