TNPSC Thervupettagam

இந்தியாவின் பாலிசிலிகான் PLI திட்டம்

August 11 , 2026 2 days 50 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது (MNRE) பாலிசிலிகான் உற்பத்திக்காக ஒரு பிரத்யேக உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை தயாரித்து வருகிறது.
  • இந்தியாவில் தற்போது பாலிசிலிகான் உற்பத்தித் திறன் இல்லை என்பதால், இது சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதையே பெரிதும் நம்பியுள்ளது.
  • முன்மொழியப்பட்ட இத்திட்டம் 10 ஜிகாவாட் (GW) அளவிற்கும் மேலான உள்நாட்டு பாலிசிலிகான் உற்பத்தித் திறனை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாலிசிலிகான் என்பது சூரிய மின்கலங்களை (solar cells) தயாரிப்பதற்கான மூலப் பொருளாகும், மேலும் இது குறைகடத்திகள் தொழில்துறைக்கும் முக்கியமானதாகும்.
  • இந்த நடவடிக்கை இந்தியாவின் சூரியசக்தி விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், இறக்குமதி சார்பைக் குறைக்கவும் மற்றும் உள்நாட்டு மதிப்பை அதிகரிக்கவும் நோக்கமாக கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்