TNPSC Thervupettagam

இந்தியா – லெசோதோ உறவுகள் 2026

August 11 , 2026 2 days 46 0
  • சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கூட்டு இருதரப்பு ஒத்துழைப்பு ஆணையத்தின் போது, ​​இந்தியாவும் லெசோதோவும் இருதரப்பு ஒத்துழைப்பின் முழு அளவையும் ஆய்வு செய்தன.
  • தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பில் வேரூன்றிய, பல்வேறு துறைகளில் இந்தியாவும் லெசோதோவும் நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பு உறவுகளையும் கொண்டுள்ளன.
  • கூட்டு இருதரப்பு ஒத்துழைப்பு ஆணையத்தின் அடுத்த கூட்டம் 2027-ஆம் ஆண்டில் மசேருவில் (லெசோதோவின் தலைநகரம்) நடைபெறும் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
  • லெசோதோ, தென்னாப்பிரிக்காவால் சூழப்பட்ட ஒரு நிலத்தால் சூழப்பட்ட நாடு ஆகும்.
  • இது "வானத்தில் உள்ள ராஜ்ஜியம்" அல்லது "மலை ராஜ்ஜியம்" என்றும் அழைக்கப் படுகிறது.
  • முழுவதும் 1400 மீட்டர் உயரத்திற்கு மேல் அமைந்துள்ள உலகின் ஒரே நாடு இதுவாகும்.
  • லெசோதோ, தெற்கு ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரத்தைக் கொண்ட மலோட்டி மலைத்தொடரில் அமைந்துள்ளது.
  • டிராகன்ஸ்பெர்க் மற்றும் மலோட்டி மலைகள் இதன் முக்கிய மலைத்தொடர்கள் ஆகும்.
  • இந்த நாட்டின் 80%-க்கும் அதிகமான பகுதி 1,800 மீட்டருக்கு (5,906 அடி) மேல் அமைந்து உள்ளது.
  • லெசோதோ உலகின் தென்கோடியில் அமைந்துள்ள நிலத்தால் சூழப்பட்ட நாடாகும்.
  • மற்றொரு நாட்டின் நிலப்பரப்பால் முழுமையாகச் சூழப்பட்ட உலகின் மூன்று சுதந்திர நாடுகளில் இதுவே மிகப்பெரியது; வாடிகன் நகரம் மற்றும் சான் மரினோ ஆகியவை மற்ற இரண்டு நாடுகளாகும்.
  • இத்தாலிய தீபகற்பம் மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியே அமைந்துள்ள ஒரே சுதந்திர நாடும், ஒரு குறுநாடாக இல்லாத ஒரே நாடும் இதுவே ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்