August 28 , 2026
16 days
106
- இந்தியாவின் புதைபடிவமற்ற எரிபொருள் மின் உற்பத்தித் திறன் 300 ஜிகாவாட்டைத் தாண்டியது.
- இது, 500 ஜிகாவாட் என்ற அதன் புதைபடிவமற்ற எரிபொருள் மின் உற்பத்தித் திறன் இலக்கில் 60 சதவீதமாகும்.
- புதைபடிவமற்ற எரிபொருள் திறனில் சூரிய சக்தி, காற்றாலை சக்தி, நீர்மின் சக்தி, உயிரி சக்தி மற்றும் அணு சக்தி ஆகியவை அடங்கும்.
- இதனைப் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- நாட்டின் மொத்த புதைபடிவமற்ற எரிபொருள் திறனில், சூரிய ஆற்றல் ஒரு முக்கிய வளர்ச்சி இயந்திரமாக இருந்து வருகிறது.

துறை வாரியாக திறன்
- நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் 164.59 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
- நிறுவப்பட்ட காற்றாலை திறன் 58.14 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
- தற்போது, நீர்மின் சக்தி 57.24 ஜிகாவாட் திறனையும், உயிரி சக்தி 11.75 ஜிகாவாட் திறனையும் கொண்டுள்ளது.
- அணுசக்தி மேலும் 8.78 ஜிகாவாட் திறனைக் கொண்டுள்ளது.
Post Views:
106