கர்நாடகாவின் பெலகாவியில் இந்தியாவின் முதல் அதிநுண்ணிய வீழ்படிவான அலுமினியம் ட்ரைஹைட்ரேட் (PPT ATH) ஆலையை ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் தொடங்கியது.
இந்த ஆலை ஆரம்பத்தில் ஆண்டுக்கு 30,000 டன் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது, இதனை 60,000 டன்னாக விரிவாக்க முடியும்.
PPT ATH என்பது கேபிள்கள்/வடங்கள், மின்கடத்திகள், வண்ணப்பூச்சுகள் மற்றும் வெப்பக் காப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஹாலஜன் இல்லாத சுடர்-தடுப்புப் பொருளாகும்.
இது தீங்கு விளைவிக்கும் ஹாலஜன் அமில வாயுக்களை வெளியிடாமல் தீப்பிழம்புகள் மற்றும் புகையின் பரவலைக் குறைக்கிறது.
இந்த ஆலை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் முற்றிலும் உயிரி, சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலில் இயங்குகிறது.
இதன் உள்நாட்டு உற்பத்தியானது கம்பி மற்றும் கேபிள் துறையில் இந்தியாவின் பெரும்பாலான தேவையைப் பூர்த்தி செய்து இறக்குமதியைக் குறைக்கும்.