இந்தியாவின் முதல் காகிதமில்லா நீதித்துறை மாநிலம் - சிக்கிம்
May 6 , 2026 5 days 72 0
முழுமையான காகிதமில்லா நீதித்துறையை ஏற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் மாநிலமாகச் சிக்கிம் மாறியுள்ளதுடன், இது டிஜிட்டல் நீதி வழங்கலில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
காங்டாக்கில் நடைபெற்ற தொழில்நுட்பம் மற்றும் நீதித்துறை கல்வி குறித்த தேசிய மாநாட்டின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த முன்னெடுப்பானது இணையவழித் தாக்கல், டிஜிட்டல் வழக்கு ஆவணங்கள், மெய்நிகர் விசாரணைகள் மற்றும் தானியங்கு பணிப்பாய்வுகள் மூலம் முழுமையான டிஜிட்டல் செயல்பாட்டை உள்ளடக்கியது.
காகிதமில்லா முறையானது நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்கவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் மற்றும் நீதி வழங்கலில் செயல்திறனை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆராய்ச்சி மொழிபெயர்ப்பு மற்றும் வழக்கு நிர்வாகத்திற்காக SUPACE மற்றும் SUVAS போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை நீதித்துறை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.