TNPSC Thervupettagam

கிக் தொழிலாளர்களுக்கான டிஜிட்டல் வழி குறைதீர்க்கும் அமைப்பு

May 6 , 2026 5 days 66 0
  • இந்தியாவில் முதல் முறையாக, கிக் தொழிலாளர்களுக்கென பிரத்யேக டிஜிட்டல் வழி குறைதீர்க்கும் அமைப்பைக் கர்நாடகா தொடங்கியுள்ளதுடன் இது நாட்டில் ஒரு பெரிய தொழிலாளர் நலச் சீர்திருத்த முன்னெடுப்பாகும்.
  • கிக் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த பொது குறைதீர்க்கும் அமைப்பு (IPGRS) வலைத் தளம் மூலம் ஊதியம், வேலை நிலைமைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுடனான மோதல்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யலாம்.
  • இந்த வழிமுறையானது விரிவடைந்து வரும் கிக் பொருளாதாரத் துறையில் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் குறைகளை விரைவாகத் தீர்ப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கர்நாடகா, ராஜஸ்தான், பீகார் மற்றும் ஜார்க்கண்டிற்குப் பிறகு, கிக் தொழிலாளர் சட்டத்தை இயற்றிய ஐந்தாவது மாநிலமாகத் தெலுங்கானா உருவெடுத்துள்ளதுடன் இது இனைய தள அடிப்படையிலான தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பை வலுப் படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்