இந்தியாவின் முதல் கைபேசி அடிப்படையிலான இணைய வாக்களிப்பு முறை – பீகார்
June 20 , 2025 12 days 63 0
பீகார் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆனது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஒரு கை பேசியினைப் பயன்படுத்தி இணைய வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
வாக்களிப்புச் செயல்பாட்டில் இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்றுக் கொண்ட நாட்டின் முதல் மாநிலமாக பீகார் விளங்கும்.
ஒட்டு மொத்த இணைய வாக்களிப்புச் செயல்முறையும் “e-Voting SECBHR” எனப்படும் கை பேசி செயலிகள் மூலம் செயல்படுத்தப்படும்.
இந்தக் கைபேசி செயலியானது மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் பீகார் மாநில தேர்தல் ஆணையத்தினால் உருவாக்கப்பட்டது.
புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த வாக்காளர்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், கர்ப்பிணிப் பெண் வாக்காளர்கள், மிகவும் வயதானவர்கள் மற்றும் முதியோர்கள் மற்றும் கடுமையான நோய் வாய்ப்பட்ட வாக்காளர்கள் இணைய வழி வாக்குப்பதிவுச் செயல்முறையைப் பயன்படுத்தி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.
இணைய வழி வாக்குப் பதிவு அமைப்பில் தொடர் சங்கிலித் தொழில்நுட்பத் தளம், அசைவைக் கண்டறிதல், முகப் பொருத்தம், நேரடி நிகழ்நேர முக ஆய்வு மற்றும் முக ஒப்பீடு போன்ற பல்வேறு இதில் அம்சங்கள் இருக்கும் என்பதால் இது வாக்களிப்புச் செயல்முறையினை பாதுகாப்பானதாக மாற்றும்.
VVPAT என்ற EVM அம்சத்தைப் போலவே, இணைய வழியான வாக்குப்பதிவுச் செயல் முறையிலும் ஒரு தணிக்கை செயல்முறை வைக்கப்பட்டுள்ளது.
இணைய வழியான வாக்குப்பதிவுச் செயல்முறையில் கிடைக்கும் தகவல்களின் படி, ஐரோப்பிய நாடான எஸ்டோனியா மட்டுமே இந்த முறையினை அறிமுகப்படுத்தி உள்ளது.