இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையம் - கேரளா
September 16 , 2019 2324 days 1032 0
இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தை கேரள அரசு கோழிக்கோட்டில் அமைக்க உள்ளது.
இது பெண்களின் தொழில் முனைவோர் மற்றும் பாலின விகிதத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.
இது கேரள அரசாங்கத்தின் சமூக நீதித் துறையின் கீழ் உள்ள ஒரு முக்கியமான பாலினப் பூங்காவாகும்.
இந்த முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தின் முதல் கட்டம் 2021 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இது பாலினப் பூங்காவின் தொலைநோக்குப் பார்வை 2020 என்பதின் கீழ் செயல்படுத்தப் படுகிறது.