இந்தியாவின் முதல் நவீன ஹோமியோபதி வைராலஜி ஆய்வகம் - கொல்கத்தா
September 13 , 2017 2787 days 1043 0
இந்தியாவின் முதல் நவீன வைராலஜி ஆய்வகம் கல்கத்தாவிலுள்ள டாக்டர். அஞ்சலி சட்டர்ஜி பிராந்திய ஹோமியோபதி நிறுவனத்தில் துவங்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இந்த ஆய்வகம் செயல்பட உள்ளது. பன்றிக்காய்ச்சல், சிக்கன் குனியா, டெங்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் இன்புளூயன்சா போன்ற வைரஸ் நோய்களில் ஹோமிபதியின் வழி அடிப்படை ஆராய்ச்சிகளை (Basic & Fundamental Research) மேற்கொள்ள 8 கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரே ஆய்வு நிறுவனம் இதுவாகும்.
இந்த ஆய்வகம் மூலம் வைரஸ் நோய்களினால் பெருகிவரும் சவால்களை களையவும் புது மருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படும்.
ஹோமியோபதியில் உயர்கல்வி (ம) பயிற்சி அளிக்கும் தேசிய ஹோமியோபதி நிறுவனம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் செயல்படுகின்றது.