TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மீன் அகற்றும் திட்டம்

August 12 , 2026 21 hrs 0 min 61 0
  • பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கமானது (BNHS), இந்தியாவின் முதல் மீனவர்களால் வழிநடத்தப்படும் ஆக்கிரமிப்பு மீன்களை அகற்றும் மற்றும் உள்நாட்டு மீன் இனங்களை மீட்டெடுக்கும் திட்டத்தை மகாராஷ்டிராவின் உஜானி நீர்த்தேக்கத்தில் தொடங்கியுள்ளது.
  • இத்திட்டமானது ஆக்கிரமிப்பு இனங்களான உறிஞ்சுவாய் கெளுத்தி, திலேப்பியா மற்றும் ஆப்பிரிக்கக் கெளுத்தி ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இந்த அந்நிய மீன்கள் உள்நாட்டு மீன்களின் பல்லுயிர்த் தன்மையையும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளன.
  • ஆக்கிரமிப்பு மீன்களை அகற்றுவது மற்றும் நீர்த்தேக்கத்தில் உள்நாட்டு மீன் இனங்களை மீட்டெடுப்பது ஆகியவை இம்முயற்சியில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்