TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மீள் நீரேற்ற விமான நிலையம்

December 5 , 2025 14 hrs 0 min 14 0
  • டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையம் ஆனது 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் போக்குவரத்தினைக் கையாளுகின்ற இந்தியாவின் முதல் மீள் நீரேற்ற விமான நிலையமாகும்.
  • ஒரு மீள் நீரேற்ற இடம் என்பது அந்த இடத்தில் பயன்படுத்தப்படுவதை விட அதிக நன்னீரை மீளேற்றம் செய்யும் இடமாகும்.
  • விமான நிலையத்தில் 625 மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகள் மற்றும் 9 மில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும் இரண்டு நீர்த்தேக்க அமைப்புகள் உள்ளன.
  • ஒரு நாளைக்கு 16.6 மில்லியன் லிட்டர் (MLD) கொள்ளளவிலான திரவச் சேமிப்பு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை ஆனது அனைத்து கழிவுநீரையும் மறுசுழற்சி செய்கிறது.
  • மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தானியங்கி அமைப்புகள் மூலம் காற்றுப் பதனம், தோட்டக் கலை மற்றும் கழிப்பறைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • நிதி ஆயோக் அமைப்பின் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (CII) ஆனது நீர் நடுநிலை கட்டமைப்பின் கீழ் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்